Jaffna Protest 02 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச மனித உரிமைகள் தினம்: காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

Share

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

Jaffna Protest 1

வலிந்து காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா போன்ற பல்வேறு கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டன.

இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அண்மையில் பாகிஸ்தானுக்கு 30 ஆயிரம் கண்கள் தானம் செய்யப்பட்டது தொடர்பாக வெளியான தகவலையும் வடபகுதி கரையோரங்களில் மிதக்கும் சடலங்கள் தொடர்பாகவும் கேள்வியெழுப்பினர்

Jaffna Protest 01 1

போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதன் போது பங்கேற்றார்.

போராட்டநிறைவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

போராட்டம் நடைபெற்ற பகுதியில் பொலிஸாரும் புலனாய்வுப்பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...