fan
விளையாட்டுசெய்திகள்

வாய்விட்டுச் சிரித்த சிராஜ்!! – மைதானத்தில் நடந்த சுவாரசியம்!!

Share

வாய்விட்டுச் சிரித்த சிராஜ்!! – மைதானத்தில் நடந்த சுவாரசியம்!!

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆட்டத்தில் வீரர்களுக்கு இடையே சீண்டல் அங்கும் இங்கும் என அனல் பறக்க சென்று கொண்டிருக்கிறது.

மற்றொரு புறம் ரசிகர்கள் மட்டுமின்றி மைதானத்தில் இருந்த வீரர்களும் வாய்விட்டு சிரிக்கும்படி ஒரு நிகழ்வு மூன்றாவது நாள் போட்டியின் போது அரங்கேறியது. அந்த நிகழ்வு தற்போது வீடியோவாகவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து அணி துடுப்பாட்டம் செய்துகொண்டிருக்கையில் இந்திய அணி உடையை அணிந்த ஒரு இங்கிலாந்து ரசிகர் மைதானத்துக்குள் நுழைந்து இந்திய வீரரை போன்றே சகஜமாக அருகிலிருந்த வீரர்களிடம் பேச முற்பட்டார். தனது ஜெர்சியில் “ஜார்வோ” என்ற அவரது பெயரை பதிவிட்டிருந்தார்.

அப்படியே இந்திய அணியின் டி-ஷர்ட்டை அச்சுஅசலாக அணிந்திருந்த அவரின் ஜெர்சியில் அதில் இந்தியனின் லோகோ, ஸ்பான்சர் என அனைத்தும் சரியாக இருந்தது. இதன் காரணமாக ஏதோ வீரர்தான் என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில் அவர் ரசிகர் என்று தெரியவந்தது.

மைதான ஊழியர்கள் அவரை மைதானத்தில் இருந்து வெளியேற்ற முற்பட்டார்கள். அப்போது அந்த மைதான அதிகாரிகளிடம் அந்த ரசிகர் தனது ஜெர்சியை காண்பித்து காண்பித்து நான் ஒரு இந்தியன் பிளேயர் என்பது போல சைகை செய்தார். இதனை கண்ட இந்திய வீரரான சிராஜ் வாய்விட்டு சிரித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...