Pakistan Death
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

பாகிஸ்தானில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்!

Share

பாகிஸ்தானில் இலங்கையர் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு அரசியல் தரப்பினரும் தமது அதிர்வலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த பிரியந்த குமாரவின் சகோதரர் தனது பேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்,

அதில், தனது சகோதரர் கொல்லப்பட்ட காட்சிகள் அடங்கிய காணொளிகளை பகிர்வதை நிறுத்துமாறு ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளப் பயனாளிகளிடம் கோரியுள்ளார்.

மேலும், தனது சகோதரரின் கொலை தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருவது தனது குடும்பத்திற்கும், குறிப்பாக பிரியந்தவின் மனைவிக்கும், அவரது இரு பிள்ளைகளுக்கும் பாதிப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக, ஏற்கனவே பகிரப்பட்டு வரும் காணொளிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரியுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
digital ID
செய்திகள்இலங்கை

டிஜிட்டல் பொருளாதாரம்: 2026-ல் ரூ. 25,500 மில்லியன் முதலீடு; மார்ச் 2026-ல் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்!

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக...

MediaFile 7
செய்திகள்இலங்கை

முதலீட்டு வலய சேவை அபிவிருத்திக்கு ரூ. 1000 மில்லியன்: வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விசா முறைமை – ஜனாதிபதி அறிவிப்பு!

நாட்டில் முதலீட்டை ஊக்குவிக்கவும், தொழில் துறையை மேம்படுத்தவும் பல புதிய அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் ஜனாதிபதி...

1036524 cigar
செய்திகள்இலங்கை

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் நாடுகள்: 70.5% உடன் இந்தோனேசியா முதலிடம்; இலங்கை 8வது இடத்தில்!

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இந்தோனேசியா உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இது...

MediaFile 2
செய்திகள்இந்தியா

நிகழ்நிலை சூதாட்ட செயலி வழக்கு: சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ரூ. 11 கோடி சொத்துகள் முடக்கம்!

ஒரு குறிப்பிட்ட நிகழ்நிலை சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்...