புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிராம்பியடி செம்மாந்தளுவ பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று மாலை குறித்த பகுதியில் விஷேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 350 மில்லி கிராம் ஹெரோயின், 140 போதை மாத்திரைகள் மற்றும் ஐந்து அளவுகளைக் கொண்ட வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
#SriLankaNews
Leave a comment