தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தேசிய கொடியை ஏந்தி விடுதலைப்புலிகளுக்கு எதிரான சுலோகங்களைத் தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அவ்விடத்திற்கு விரைந்த யாழ்ப்பாண பொலிஸார் ஒன்றுகூடி போராட்டங்கள் நடத்த முடியாது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டோரை அவ்விடத்திலிருந்து கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
அவ்வாறு செல்லாவிடின் கைது நடவடிக்கை இடம்பெறும் எனத் தெரிவித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.
#SrilankaNews
Leave a comment