Malaiyagam
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

200 வருடங்களாக காணி உரிமையின்றி வாழும் மலையக மக்கள்!

Share

200 வருடங்களாக இந்நாட்டுக்கு உழைத்தும் இன்னும் காணி உரிமையற்றவர்களாகவே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்துவருகின்றனர்.

அவர்களுக்கு ஒரு துண்டு காணியைக்கூட வழங்கமுடியாத நிலையிலேயே காணி அமைச்சு இருக்கின்றது.” -என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (27) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” காடாக இருந்த மலைநாட்டை மலையக மக்கள் வளமாக்கினர். இந்நாட்டின் பொருளாதாரத்தை தோளில் சுமந்தனர். 200 வருடங்களாக உழைப்பை வழங்கிவருகின்றனர். ஆனால் அம்மக்களுக்கு இன்னும் காணி உரிமை இல்லை.

தற்போது 7 பேர்ச்சஸ் காணியில் வீடுகள் கட்டப்படுகின்றன. அதுவும் பின்னிலையிலேயே இருக்கின்றது.

ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது எனக் கூறப்பட்டாலும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. எனவே, அவர்கள் தொடர்பில் கூடுதல் கரிசனை செலுத்துங்கள்.”- என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...