IMG 9705
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் 183 குடும்பங்கள் பாதிப்பு!

Share

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

காலநிலை தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று மாலை நான்கு மணிவரையான நிலவரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

நேற்று முதல் பெய்த மழை மற்றும் அதிக காற்று காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் காரைநகரில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனரென தெரிவித்தார்.

இதேவேளை காரைநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமை பிரிவினர் நேரடி கள விஜயத்தினை மேற்கொண்டு சேத விபரங்கள் தொடர்பில் களஆய்வில் ஈடுபட்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...