“பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படாது. அது தற்போதைய யுகத்துக்கேற்ப மாற்றியமைக்கப்படும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் எதிரணி உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அது தொடர்பில் நாம் பல விடயங்களை செய்துவருகின்றோம்.
எமது நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் 42 வருடங்கள் பழமையானது, அதை முழுமையாக இரத்து செய்யமாட்டோம். திருத்தி அமைக்கப்படும்.
அதற்கான யோசனைகள் சபையில் முன்வைக்கப்படும். அச்சுறுத்தல்களுக்கு பணிந்து நாம் தீர்மானம் எடுப்பதில்லை.
ஐரோப்பிய ஒன்றிய தூதுவரை நாளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளேன். அதன்போது இது பற்றி தெளிவுபடுத்தப்படும். சர்வதேசத்துடன் சிறந்த உறவை பேணி வருகின்றோம். ” – என்றார்.
#SriLankaNews
Leave a comment