pavatkulam2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திறக்கப்பட்ட பாவற்குளத்தின் வான்கதவுகள் – மக்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை!!

Share

பாவற்குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதனால்,  அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் மத்திய நீர்பாசன திணைக்கள பொறியிலாளர் கு.இமாசலன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் நேற்று முன்தினம் (23) இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் 18 அடி 6 அங்குலமாக அதிகரித்துள்ளது. இதனால் நேற்று மாலை பாவற்குளத்தின் 2 வான் கதவுகள் ஒரு அடி அளவுக்கு திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாவற்குளத்தின் கீழ் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1, பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும் முன்னெச்சரிக்கையுடனும்,இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

அத்துடன் மத்திய நீர்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள முகத்தான்குளம் மற்றும் மருதமடுகுளம் ஆகியனவும் வான்பாய்ந்து கொண்டிருக்கின்றன. எனவே அதன் கீழ் உள்ள மக்களும் அவதானமாக இருக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...