point pedro urban
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பருத்தித்துறை நகர சபை உறுப்பினருக்கு தொற்று! – இன்றைய தினம் அமர்வில் பங்கேற்றவர்!!

Share

பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த உறுப்பினர் இன்று நடைபெற்ற பருத்தித்துறை நகர சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரசபை தவிசாளரால் நகரசபையின் வரவு செலவுத் திட்டம் தவிசாளரால் இன்று முன்வைக்கப்பட்டது. இந்த வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐவரும், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேட்டை ஆகியவற்றின் உறுப்பினர் தலா ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர்.

இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் ஆறு பேரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்தனர்.

இதன்படி, வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் சமநிலை காணப்பட்டது. இந்நிலையில் உள்ளூராட்சி மன்றச் சட்டத்துக்கு அமைய தவிசாளர் வாக்கும் கணக்கெடுக்கப்பட்டது. தவிசாளர் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் உடல்நலக் குறைவுடன் காணப்பட்டுள்ளார்.

வாக்கெடுப்பின் பின்னர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை முன்னெடுத்த நிலையில் அவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...