b5150105697e4b6a4ac169c62be0923d XL
செய்திகள்இலங்கை

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய அறிவிப்பு

Share

இனி நாட்டில் முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ் விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,  2022 ஜனவரி முதலாம் திகதி முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் முச்சக்கரவண்டிகளுக்கு  மீற்றர் பொருத்தும் வேலைத்திட்டம்  ஆரம்பமாகவுள்ளது.

எதிர்காலத்தில் மீற்றர் இல்லாமல் இயங்கும் முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்வதற்கான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முச்சக்கரவண்டித் தொழிலுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டிகளுக்கான ஒழுங்குமுறை அதிகார சபையொன்றும் ஸ்தாபிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23858849 newproject 2025 12 28t112541304
செய்திகள்உலகம்

இனி வீட்டு வேலைகளுக்கு ‘ஹுமாயுனோய்டு’ ரோபோக்கள்: சிலிக்கான் வேலியில் தீவிரமடையும் தயாரிப்புப் பணிகள்!

வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்வதற்கான மனித ரொபோக்களை தயாரிக்கும் பணிகள் அமெரிக்காவின் சிலிக்கன் வெலி தொழில்நுட்ப...

24632725 china
செய்திகள்உலகம்

சீனாவில் களைகட்டிய உலக இந்தி தினம்: ஷாங்காய் இந்தியத் தூதரகத்தில் மாணவர்கள் உற்சாகப் பங்கேற்பு!

உலக இந்தி தினத்தை முன்னிட்டு சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விசேட கொண்டாட்டங்கள்...

kalvi L 260112092401000000
செய்திகள்உலகம்

தட்சசீலத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான குஷான கால நாணயங்கள் கண்டெடுப்பு: உலகளாவிய வணிக மையம் என்பது உறுதி!

பாகிஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க தட்சசீலம் (Taxila) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், 2,000 ஆண்டுகள் பழமையான குஷானப்...

26 69631f5fb34d5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தீவிரமடையும் வைரஸ் காய்ச்சல்: கொழும்பில் சிக்குன்குனியா; நாடு முழுவதும் டெங்கு அச்சம்!

இலங்கையில் தற்போது பல்வேறு வகையான வைரஸ் நோய்கள் வேகமாகப் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின்...