செய்திகள்
மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியாது என்கிறார் பொன்சேகா!!!
எதிரணி உறுப்பினர்களை ஒடுக்கினாலும், மக்கள் எழுச்சியை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்.” – இவ்வாறு அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எந்நாளும் ஏமாற்றப்படுகின்றனர். இம்முறையும் பாதீடு ஊடாக ஏமாற்றப்பட்டுள்ளனர்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் வீடுகளாவது தேவை. அப்படியானால் ஒரு வீட்டுக்கு 5 ஆயிரம் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை வைத்துக்கொண்டு மலசலக்கூடம் ஒன்றைக்கூட கட்டமுடியாது.
தோட்ட மக்களுக்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்கு குறைந்தபட்சம் ஒன்றரை மில்லியன் ரூபா தேவை.
விவசாயிகள், சிறு முயற்சியாளர்கள் என அனைவரும் பாதீட்டில் ஏமாற்றப்பட்டுள்ளனர். தூரநோக்கு திட்டங்கள் இல்லை. “- என்றார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login