sunshine coast filling up car
செய்திகள்இலங்கை

போதியளவு எரிபொருள் கையிருப்பு –மொஹமட் உவைஸ்!

Share

இலங்கையில் போதியளவு எரிபொருள் இருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை  தெரிவித்தார்.

மேலும் அவர்,  தற்போது நாட்டில் எரிபொருள் விநியோகம் துரிதமாக நடைபெற்று வருகின்றது.  களஞ்சியசாலைகளிலும் போதுமான எரிபொருள் காணப்படுகின்றது.

எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை. எனவே வீணாக மக்கள்  குழப்பமடைந்து எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட வேண்டாம்.

நாட்டுக்குத் தேவையான எரிபொருள் தற்போது எமது கிடங்குகளில் உள்ளது என்பதை நான் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன்.

மேலும் நாளை 36,000 மெட்ரிக் தொன் பெற்றோலை இறக்குமதி செய்யவுள்ளோம்.

எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் 40,000 மெற்றிக் தொன் டீசல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளது என்றும் இதன்போது தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...