செய்திகள்
ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் வரவு செலவுத் திட்டம்
அமெரிக்க வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பித்து ஏழை மக்களின் வயிற்றில் அடித்துள்ள இந்த அரசிடமிருந்து மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புகாமி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போது இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஏழைகளே இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட் டுள்ளார்கள்.
நாட்டில் விபத்து நடத்தால் விபத்தில் சிக்கியவர்கள் காப்புறுதி நிறுவனத்தின் மூலம் நட்டஈடுகளை பெறுவதே வழமை. ஆனால் இப்போது வழமைக்கு மாறாக விபத்தில் சிக்கியவர்களே அரசுக்கு நட்டஈடு செலுத்த வேண்டுமாம்.
ஏழை விபத்தில் சிக்கினால் ஏழைகளின் நிலைமை என்ன?
ஏழை விவசாயிகள் உரமின்றி விவசாயத்தை கைவிடும் நிலைக்குச் சென்றுள்ளனர்.
இதனால் மரக்கறிகளின் விலை கிலோ 700 ரூபாவிற்கும் அதிகமாக விற்கப்படுவதால் ஏழை மக்கள் அவற்றை வாங்கிச் சாப்பிட முடியாத நிலை உருவாகியுள்ளது.
எனவே நாடு மீண்டும் உணவுப் பஞ்சத்தை நோக்கியே நகர்ந்து செல்கின்றது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login