Bird flu
உலகம்

அவுஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்.

Share

 

தெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் கடற்கரை பகுதிக்கு அருகில் முதன்முறையாக 50க்கும் மேற்பட்ட கடற்பறவைகள் உயிரிழந்ததை அடுத்து, அங்கு ‘எச்5என்1’ (H5N1) பறவைக் காய்ச்சல் நோய் மேலும் வேகமாகப் பரவக்கூடும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

அடிலெய்ட் பகுதிக்கு தெற்கே உள்ள கேப் ஜாஃபா பாறைப் பகுதிகளில் 49 இறந்த பறவைகளும், 35 நோய்வாய்ப்பட்ட பறவைகளும் இனங்காணப்பட்டுள்ளன.

அவற்றுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் H5N1 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய விவசாயத் துறை அமைச்சர் ஜூலி காலின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், இதுவரை பண்ணைப் பறவைகளிடம் இந்த வைரஸ் பரவவில்லை என்றும், ஜூன் மாதம் முதல் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

உலக அளவில் மில்லியன் கணக்கான பறவைகளும் பாலூட்டிகளும் இந்த நோயால் உயிரிழந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா இதுவரை இந்த வைரஸால் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருந்தது.

எச்5என்1 வைரஸ் மனிதர்களுக்குப் பரவும் அபாயம் மிகவும் குறைவு என்றாலும், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

Share
தொடர்புடையது
feathredmnnkn
உலகம்

இத்தாலியின் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இத்தாலியின் எட்னா எரிமலை மீண்டும் சீற்றமடைந்து வருவதால், சிசிலி தீவிலுள்ள கெடானியா சர்வதேச விமான நிலையத்திற்கு...

robo
உலகம்

ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவு – எச்சரித்துள்ள சீனா!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சீனாவில் தயாரிக்கப்படும் புதிய தரவுமைய சாதனங்களின் இறக்குமதிக்கு தடை...

சூறாவளி 1
உலகம்

ஜப்பானை நோக்கி வேகமாக நகரும் சூறாவளி – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்.

பசிபிக் பெருங்கடலில் உருவான ‘டொல்பின்’ தீவிர சூறாவளி ஜப்பானை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருவதுடன், அது...

huteees
உலகம்

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்களால் அதிகரிக்கும் மசகு எண்ணெய் விலை.

சவூதி அரேபியாவை சேர்ந்த ஆறு பிரம்மாண்ட எண்ணெய் தாங்கிகள், யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக,...