PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

Share

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க, சிறப்பு பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில், X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளி பதிவில், “மாணவர்களின் எதிர்காலத்திற்காக இந்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடுமையான சட்டப் பிரிவுகளுடன் கூடிய புதிய சட்டத்தைக் கொண்டுவரும் திசையிலும் நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வருகிறோம்.

இருப்பினும், நாம் எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்க வேண்டும். நமது தேர்வு முறை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும், நவீனத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகளவில் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டு, சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுநரான நந்தன் நிலேகணி தலைமையில் உயர்மட்டப் பணிக்குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்புக்குழு, வழங்கும் அறிக்கையின் பிரகாரம், வரவிருக்கும் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

sivakarthikeyan vijay
இந்தியா

முதலமைச்சரை சந்தித்த சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். குறித்த, சந்திப்பின்...

wedding
இந்தியா

ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே திருமணம்!

இந்தியாவில் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் ரூ.11 இலட்சம் வருமானம் பெரும் பெண் ஒருவர், தமக்கு வாழ்க்கைத்...