multiple airplanes flying
உலகம்

மத்திய கிழக்கினை கடந்து பயணிக்க முடியாது – மூடப்பட்ட வான்வெளிகள்.

Share

 

மத்திய கிழக்கில் நேற்றைய தினம் இரவு திடீரென பதற்றம் அதிகரித்ததமையால் மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டிருந்தது.
குவைத் நகரம் மற்றும் தம்மாம் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL229 நேற்று மாலை 5:10 மணிக்கு பஹாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்டதுடன், விமானம் UL253 மாலை 6:36 மணிக்கு தம்மாமில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்டது.

விமானங்கள் மத்திய கிழக்கை நெருங்கியபோது, ​​ஈரானால் தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தபட்டதாக கூறப்படுகிறது. அதனால் தொடர்ந்து, குவைத்தும் சவூதி அரேபியாவும் தத்தமது வான்வெளிகளைத் தற்காலிகமாக மூடின.

இந்நிலையில் உரிய இடங்களுக்கு உடனடியாக செல்ல முடியாத காரணத்தினால், அந்த இரண்டு விமானங்களும் பாதிக்கப்பட்ட வான்வெளிக்கு அருகே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக பறந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

தற்காலிகமாக வான்வெளிகள் மூடப்பட்டதால், மற்றும் பல சர்வதேச விமானங்களும் வானில் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த விமானங்கள் இரண்டும் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பி வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
feathredmnnkn
உலகம்

இத்தாலியின் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இத்தாலியின் எட்னா எரிமலை மீண்டும் சீற்றமடைந்து வருவதால், சிசிலி தீவிலுள்ள கெடானியா சர்வதேச விமான நிலையத்திற்கு...

robo
உலகம்

ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவு – எச்சரித்துள்ள சீனா!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சீனாவில் தயாரிக்கப்படும் புதிய தரவுமைய சாதனங்களின் இறக்குமதிக்கு தடை...

சூறாவளி 1
உலகம்

ஜப்பானை நோக்கி வேகமாக நகரும் சூறாவளி – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்.

பசிபிக் பெருங்கடலில் உருவான ‘டொல்பின்’ தீவிர சூறாவளி ஜப்பானை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருவதுடன், அது...

huteees
உலகம்

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்களால் அதிகரிக்கும் மசகு எண்ணெய் விலை.

சவூதி அரேபியாவை சேர்ந்த ஆறு பிரம்மாண்ட எண்ணெய் தாங்கிகள், யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக,...