money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

Share

 

வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க , வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானியில், நிறுவனங்கள் மற்றும் சங்கங்களுக்கான பதிவுக்கட்டணங்களை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், முன்னர் ரூ. 4600 ஆக இருந்த ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 5200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், முன்னர் ரூ. 23,000 ஆக இருந்த அரச வரையறுக்கப்பட்ட நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 26,400 ஆகவும், முன்னர் ரூ. 17,250 ஆக இருந்த ஒரு வரம்பற்ற நிறுவனத்தை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 19,800 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிறுவனத்தின் பெயரை அங்கீகரிப்பதற்கான கட்டணம் ரூ. 2600 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், ரூ. 3450 ஆக இருந்த சங்கங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 19,800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், சங்கங்களின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான கட்டணம் ரூ. 1900 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போதைய கட்டணம் ரூ. 3900 ஆக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...