water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

Share

 

பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும் 2020ம் ஆண்டின் வெப்ப சாதனைகளை சுலபமாக முறியடித்து, இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 8 முறை இங்கிலாந்தின் வெப்பம் 34°C-ஐ தொட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் பல நீர் வழங்கல் நிறுவனங்கள் மிக கடுமையான கட்டுப்பாட்டை அறிவித்து, பிரித்தானியாவில் வறட்சி ஏற்படாமல் தடுக்க போராடி வருகின்றனர்.

பொதுமக்களுக்கு நீர் வழங்கல் நிறுவனங்கள், தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்கவும், கையிருப்பில் இருக்கும் தண்ணீரை பாதுகாக்கவும் தண்ணீர் பயன்பாட்டிற்கான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

நிலவி வரும் அதிகப்படியான வெப்பம் காரணமாக தண்ணீரின் தேவை அதிகரித்து இருப்பதால், பல நீர் வழங்கல் நிறுவனங்கள் தற்காலிகமாக குழாய்கள் மூலமாக தண்ணீர் பயன்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளனர்.

டெவோன், கார்ன்வால் மற்றும் ஈஸ்ட் ஆங்க்லியா என குறிப்பிட்ட பகுதிகளில் வறட்சி ஏற்படும் அபாயம் குறித்தும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன், பெரும்பாலான இந்த புதிய கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை அதிகாலை 1 மணி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...