sanakkiyan
ஏனையவை

திருமண வீட்டில் கதைக்க வேண்டியதை மரண வீட்டில் கதைப்பதுபோலவே பட்ஜெட்

Share

திருமண வீட்டில் கதைக்க வேண்டிய விடயத்தை, மரண வீட்டில் கதைப்பதுபோலவே நிதி அமைச்சரின் வரவு- செலவுத் திட்ட உரை அமைந்திருந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” வரவு- செலவுத் திட்டத்தில் வருமானங்கள் எவை, செலவீனங்கள் எவை என பட்டியலிடப்பட வேண்டும். இந்த பாதீட்டில் செலவீனங்கள் உள்ளன. வருமான வழிமுறைகள் உரிய வகையில் விளக்கப்படவில்லை.

அத்துடன், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு உரிய ஒதுக்கீடுகள் இடம்பெறவில்லை. ஆளுங்கட்சியிலுள்ள தமிழ் உறுப்பினர்களுக்கு இது பற்றி கவலை இல்லை.

நல்லாட்சியின்போது ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள்கூட நிறுத்தப்பட்டுள்ளன. நான் தமிழில் கூறிய விடயங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெளிவாக விளங்கவில்லை. அதனால்தான் எனது உரையை குழப்புவதற்கு குறுக்கீடு செய்கின்றார்

நாம் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் அவை உரிய வகையில் முன்னெடுக்கப்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக பேசப்படுகிறது. எனக்கு வயது 31 தான் ஆகின்றது. எனக்கு உண்மையில் ஓய்வூதியம் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் எனும் ஒன்றே தேவையில்லை. மக்கள் சேவைக்காக வரும் உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம்?” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...