மன்னார்- கோந்தை பிட்டி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இளைஞனு ஒருவருடன் நடந்து வருகின்ற சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
குறித்த யுவதியும், இளைஞனும் முகக்கவசம் அணிந்து நடந்து வருகின்ற சிசிரிவிக் காட்சிகளானது ககடந்த 11 ஆம் திகதி மாலை பதிவாகியுள்ளது.
இந்தநிலையிலேயே கடந்த 11 ஆம் திகதி மாலை 07 மணியளவில், மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குறித்த யுவதி கடலில் குதித்தமையை நேரில் அவதானித்ததாக மீனவர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே பொலிஸாரும், கடற்படையினரும் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
எனினும் நேற்று (13) காலை கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் சடலமாக கரையொதுங்கிய நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் இதுவரை சடலம் இனங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment