Vinothan 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் கட்டாய புதிய நடைமுறை நாளை முதல் அமுல்!

Share

இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, நாளை (15) முதல் மன்னார் மாவட்டத்தில், வியாபார நிலையங்கள், சந்தைகள், பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்திச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் இம்முறையானது மன்னாரில் நடைமுறைக்கு வருகிறது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மன்னாரில் தற்போதுள்ள காலநிலையினால் வைரஸ் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலையாகக் காணப்படுகின்றது. மக்கள் கட்டாயம் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

கொவிட் தொற்று அதிகரிப்புக்குப் பிரதான காரணமாக மக்கள் அதிகமாக வெளியில் நடமாடுவது, சுகாதார நடை முறைகளைக் கடைப்பிடிக்காது செயற்படுவது மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பங்கு கொள்வதும் ஒரு காரணமாகவே அமைந்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, நாளை(15) முதல் வியாபார நிலையங்கள், சந்தைகள் ,பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்திச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நடவடிக்கை குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனையில் ஈடுபடுவார்கள்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் கடந்த 13 நாட்களில் 292 தொற்றாளர்களும், இதுவரை மன்னார் மாவட்டத்தில் 2,685 கோவிட் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...