போக்குவரத்து சட்டம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் ஆவணம் பொய்யானது என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அண்மையை நாட்களாக, சமூக வலைத்தளங்களில் ‘திருத்தப்பட்ட மோட்டார் போக்குவரத்துச் சட்டம்’ எனக் குறிப்பிட்டு போலியான ஆவணம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இவ் விடயம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் போக்குவரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போக்குவரத்து விதி மீறல்கள் மற்றும் அபராதங்கள் ஆகியவை தற்போதுள்ள சட்டங்களின்படி தவறானவை. இவ்வாறான போலி விடயங்களை பகிரவேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment