யாழ்ப்பாணம் நெடுந்தீவில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 119.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் கடும் மழையின் தாக்கத்தினால் 14 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர், உறவினர்களது வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
#SrilankaNews
Leave a comment