1731510018 WhatsApp Image 2024 11 13 at 7.13.31 PM 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நிவாரணப் பொருட்களிலும் கைவரிசை: கூரை ஓடுகளைப் பிரித்து 55 உலர் உணவுப் பொதிகள் திருட்டு!

Share

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொதிகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து கற்பிட்டி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்டலக்குடா கிராமம்.

கிராம மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது போக எஞ்சிய 181 பொதிகள், அங்கிருந்த மரண விசாரணை அதிகாரி ஒருவரின் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இனந்தெரியாத நபர்கள் வீட்டின் கூரை ஓடுகளை அகற்றி உள்ளே புகுந்துள்ளனர்.

சுமார் 2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 55 உலர் உணவுப் பொதிகளைத் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

மண்டலக்குடா கிராம அலுவலரால் நேற்று (27) சனிக்கிழமை கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணப் பொருட்களைத் திருடிய மனிதாபிமானமற்ற இச்செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...