நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பான தீர்மானங்களை மக்களின் நடத்தைகளே தீர்மானிக்கின்றன.
இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டில் துபோது கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் பகுதியளவில் நீக்கப்பட்டுள்ளன, இந்நிலையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்குமாயின் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் மக்களின் செயற்பாடுகளே தீர்மானிக்கும்.
மக்கள் சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றாது செயற்படுவார்களாயின், மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் உட்பட இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.
அரசாங்கம் கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மக்களும் தமது அதிகபட்ச பங்களிப்பை வழங்க வேண்டும். மக்களின் செயற்பாடுகளைப் பொறுத்தே கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
கொரோனா பரவல் தொடர்பில் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. ஆனால் தொற்று நோய் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அனைவரது எதிர்காலத்துக்கும் நல்லது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே நாட்டில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. எனவே தடுப்பூசிகள் தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை – எனவும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment