MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

Share

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று (17) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலை வளாகத்திற்குள் சில வெறுமையான தோட்டாக்கள் (Empty Shells) கண்டெடுக்கப்பட்டன.

இந்தச் சம்பவத்தால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் வைத்தியர்கள், தமக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வைத்தியர்களின் இந்தத் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக, அநுராதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தூர இடங்களிலிருந்து சிகிச்சைக்காக வருகை தந்த நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வெளிநோயாளிப் பிரிவு மற்றும் ஏனைய கிளினிக் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், வைத்தியசாலை அதிகாரிகளுடன் பாதுகாப்புத் தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

 

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...