TAMILAKAM
செய்திகள்இந்தியா

பாடசாலைகளுக்கும் ,கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை!

Share

தமிழகத்தில் கனமழை காரணமாக நாளை பாடசாலைகளுக்கும் ,கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பெரம்பலூர், அரியலூர், மதுரை மாவட்டங்களில் நாளை மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதியில்‌ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 11-ஆம் தேதி வட தமிழக கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதிபாடசாலைகள், கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் நவம்பர் 10, 11 ஆகிய இரு நாள்களுக்கு பாடசாலைகள் , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரம்பலூர், அரியலூர், மதுரை மாவட்டங்களில் நாளை மட்டும் பாடசாலைகள் , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் நாளை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...