24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

Share

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு தனியார் காணியில் இன்று (நவ  7) காவல்துறையின் விசேட அதிரடிப்படையினரால் (STF) விசேட தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சஹ்ரான் சம்பவத்திற்குப் பின்னர் குறித்த தனியார் காணி தகர வேலி அமைத்துப் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அங்குத் திடீரென ஒரு குழி தோண்டப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் காணி உரிமையாளரால் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அந்தக் குழி தொடர்பில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று தீவிரமாகத் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எவ்விதமான தடயங்களும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...