12 6
உலகம்செய்திகள்

மீண்டும் போரிட வாருங்கள்.. இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்த அதிரடி அறிவிப்பு

Share

எங்களுடன் மீண்டும் போரிட வாருங்கள். அப்போது இந்தியா அதன் சொந்த போர் விமானங்கள், இடிபாடுகளின் கீழ் புதைக்கப்படும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.

இதற்குப் பதிலடியாக இந்திய இராணுவம், ஓபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லையில் இருந்த பயங்கரவாதிகளின் 9 முகாமகளை தாக்கியது.

இந்த தாக்குதலில் 100இற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதனை தொடர்ந்து இந்திய – பாகிஸ்தான் இராணுவத்தினர் தீவிர தாக்குதலில் ஈடுபட்டனர்.

அதற்கு பின்னர், 4 நாட்களுக்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், இருதரப்பும் குறித்த போர் பற்றிய செய்திகளை அவ்வப்போது தெரிவித்து வந்ததையடுத்து, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ”இந்தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தேவைப்படும் போதெல்லாம் எந்த எல்லையையும் கடக்க முடியும்” என்று எச்சரித்தார்.

அதேநேரம், இந்திய இராணுவத் தளபதி உபேந்திரா திவேதி, ”உலக வரைபடத்தில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பினால்” பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் ஓபரேஷன் சிந்தூரில் காட்டிய நிதானத்தை இந்தியா அடுத்த முறையும் காட்டாது எனவும் கடுமையாக எச்சரித்திருந்தார்.

இதற்கிடையில், தற்போது அதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், இந்திய இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களின் அண்மைய பேச்சுகள், மே மாத (சிந்தூர் தாக்குதல்) தோல்வியில் இழந்த அவர்களின் கறைபடிந்த நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் தோல்வியுற்ற முயற்சியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “எங்களுடன் மீண்டும் போரிட வாருங்கள். அப்போது இந்தியா அதன் சொந்த போர் விமானங்கள் இடிபாடுகளின் கீழ் புதைக்கப்படும். பாகிஸ்தான் அல்லாஹ்வின் பெயரால் நிறுவப்பட்ட ஒரு நாடு. நமது பாதுகாவலர்கள் அல்லாஹ்வின் வீரர்கள்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின்...

17 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக...

19 1
இலங்கைசெய்திகள்

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சாலையைக்...