ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெறவுள்ளது என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச கூட்டணிக்குள் அண்மைக்காலமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு முடிவு கட்டும் நோக்கிலேயே பிரதமர் தரப்பால் இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் அலிசப்ரிக்கும் இடையில் ரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னரே ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் தீர்மானித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment