18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

Share

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற குழு கூடியபோது நாடாளுமன்ற பணிக்குழாமினரின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, நாடாளுமன்ற பணிக்குழாமினருக்கான உணவு கட்டணங்களை நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் 4000 ரூபாவாகவும், நிர்வாக தரமற்ற ஊழியருக்கு மாதம் 2,500 ரூபாவாகவும் 2025.06.01 முதல் வசூலிக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது

அதன்படி, இந்த புதிய விலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மே 23ஆம் திகதி குழுவால் தீர்மானிக்கப்பட்டபடி, நாடாளுமன்ற பொது உணவகத்தில் உணவுகளை கொள்வனவு செய்யும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி/பிரதமர் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் ஊடகவியாளாலர்களுக்கும் தற்போது வசூலிக்கப்படும்.

உணவுக் கட்டணங்கள் மாறாமல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நுவரெலியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுமுறை இல்லத்தின் ஒரு பகுதியை நாடாளுமன்ற ஊழியர்களுக்காக ஒதுக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...