Vidura Wickramanayaka 1
செய்திகள்இலங்கை

இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழ் பல்கலைக்கு விஜயம்

Share

தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு, பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

இன்று (6), சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்க விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை தொடர்பாக்க் கேட்டறிந்து கொண்டதுடன், அங்கு மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார். அதன் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் ஆய்வுகூடத்தையும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பார்வையிட்டார்.

இச் சந்திப்பின், போது தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. நிஷாந்தி ஜெயசிங்க, இலங்கை தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க, யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் கே.சுதாகர், யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் கலாநிதி கே.அருந்தவராஜா, வரலாற்றுத் துறை ஓய்வுநிலை விரிவுரையாளர்களான கலாநிதி ப.புஷ்பரட்ணம், கலாநிதி கே.சிற்றம்பலம், கலாநிதி ச.சத்தியசீலன், கலாநிதி செ.கிருஷ்ணராஜா உட்பட விரிவுரையாளர்கள் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் கே. சிவராம், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், மற்றும் தொல்லியல்துறையினர், மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் நிறைவில் இலங்கை தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்கவினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திற்கு நூல் ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 67c59f0b797d7
இந்தியாசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை: செவ்வந்தி தப்பிக்க உதவிய 4 சந்தேகநபர்களுக்கு நவம்பர் 7 வரை விளக்கமறியல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட...

25 68fb42eb327aa
செய்திகள்இலங்கை

பாடசாலை நேர நீட்டிப்புக்கு எதிர்ப்பு: ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்ட எச்சரிக்கை!

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால்...

379161 crime 02 1
செய்திகள்இலங்கை

வாள்வெட்டு, போதைப்பொருள் கடத்தல்: சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்கு!

வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்த எட்டுப் பேருக்கு...

Kajen
செய்திகள்இலங்கை

“வடக்கு-கிழக்கில் போதைப்பொருள் பரவலுக்கு இராணுவமே காரணம்”: நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போதைப்பொருளைப் பரப்புவதில் இராணுவத்தினருக்குப் பெரும் பங்கு உள்ளது எனத் தமிழ்த்...