2029ஆம் ஆண்டுக்குள் நேட்டோ நாடுகளின் கிழக்கு பகுதியில் ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என ஜெர்மனியின் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் கார்ஸ்டன் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதலுக்குத் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன், ஆண்டுதோறும் 1,500 பீரங்கிகளையும் மில்லியன் கணக்கான பீரங்கி குண்டுகளையும் உற்பத்தி செய்வது உட்பட ரஷ்யாவின் இராணுவ கட்டமைப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்த இருப்புக்கள் உக்ரைன் போருக்கானது மாத்திரமல்ல எனவும் அவை நேட்டோ உறுப்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக இருக்கலாம் எனவும் அவர் கருதுகின்றார்.
போலந்துக்கும் லிதுவேனியாவிற்கும் இடையிலான மூலோபாய ரீதியாக பாதிக்கப்படக்கூடிய பகுதியான சுவால்கி இடைவெளியை ரஷ்யா இலக்கு வைக்கக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.