ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், அவரின் அமைச்சரவையையும் கடுமையாக விமர்சித்துள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் டியூ குணசேகரமீது, சரமாரியாக சொற்கணை தொடுத்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரமற்ற கைப்பாவை என்பதே எனது கருத்து. சுதந்திரத்துக்கு பிறகு உருவான முட்டாள் தனமான அமைச்சரவையே இது. மடத்தனமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.” – என்று டியூ குணசேகர அரசுமீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே கருத்து வெளியிட்டுள்ளார்.
” டியூ குணசேகர என்பவர் பலவீனமான அரசியல் கட்சித் தலைவர். கம்யூனிஸ்ட் கட்சியை அழித்தவர். கோப் குழுவின் தலைவராக இருந்து எதனையும் செய்யவில்லை. அவர் நல்லாட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்.”- என்றார்.
#SriLankaNews
Leave a comment