tnadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 17 2025 – Daily Horoscope

Share

இன்றைய ராசிபலன் 17.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 3, சனிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் உள்ள ரோகிணி, மிருகசீரிடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நன்மை தீமை என கலவையான பலன்கள் கிடைக்கும். உங்களின் ரகசியங்களை பிறரிடம் பகிர வேண்டாம். இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி தேர்வுக்கு தயாராக கூடிய மாணவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். நண்பர்களுடன் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவீர்கள். இன்று எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று கடன் வாங்குவது, கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டிய நாள். வண்டி வாகன பயன்பாட்டில் நிதானம் தேவை. காதல் வாழ்க்கையில் துணையுடன் வாக்குவாதம் ஏற்படும். இன்று உங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். உங்கள் வேலைகளை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும் நாள். குடும்பத்தில் சொத்து தொடர்பான தகராறுகள் குடும்ப பெரியவர்களின் உதவியால் தீரும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று அதிக பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும். இதனால் மன அழுத்தமான நிலை இருக்கும். உங்கள் பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்படலாம். புதிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்க வாக்குறுதியை நிறைவேற்ற போராடுவீர்கள். இன்று கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். அரசியலில் உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களையும் வெளிப்படுத்துவதில் வரும். குறிப்பாக எதிரிகள் விசயத்தில் கவனமாக இருக்கவும். உங்கள் வேலை தொடர்பாக திடீர் பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்குக் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இன்று பிறரின் வார்த்தைகளை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். அது தவறாக அமைய வாய்ப்பு உண்டு.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பணம் தொடர்பான விஷயங்களில் சாதகமான நாளாக இருக்கும். உங்கள் முதலீடுகள் மூலம் லாபம் குறைவாகவே கிடைக்கும். நிதிநிலை தொடர்பாக கவலை ஏற்படும். அதனால் இன்று அவசரப்பட்டு எந்த ஒரு முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். முயற்சி எதுவும் நல்ல செய்தி கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் உடல் நலம் கவலை தரும். குடும்பத்தில் மூத்தவர்களிடம் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று புதிய நண்பர்களின் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் சில முக்கிய விவாதங்கள் நடக்கும். உங்களின் கருத்துக்களை மதிப்பு அதிகரிக்க கூடிய நாள். வேலை, வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. பெரிய பண பரிவர்த்தனை விஷயங்களில் அன்னியர்களை நம்ப வேண்டாம். இன்று பணம் கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன் கிடைக்கக்கூடிய நாள். வீட்டுக்கு புதிய விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியாக அதிகரிக்கும். திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வியாபார வேலைகள் இன்று முடியும். உங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து முக்கியமான முடிவு எடுக்கலாம். உங்கள் முன்னேற்றத்தில் ஏதேனும் தடை நீங்கும். உங்கள் பிரச்சனைகள் குறித்து உங்கள் சகோதரர்களுடன் பேசி தீர்வு காண்பீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். குறிப்பாக வியாபாரம் செய்பவர்களுக்கு இது பொருந்தும். உங்கள் வீட்டிற்கு புதிய விருந்தினர்களின் வருகை இருக்கும். நண்பர்களுடன் விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டு. உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். நிலுவையில் இருந்த பணம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று செலவுகள் அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைப்பதால் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களைச் செலவிடுவீர்கள். உங்கள் குடும்பத்தில் கொண்டாட்டமான நிகழ்வுகள் நடக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரத் திட்டம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முக்கியமான ஆவணங்களை கவனமாகப் பார்க்கவும். தந்தைக்கு கண் தொடர்பான பிரச்சனை வரலாம். அதில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலைப் பளு காரணமாக வேலையை முடிப்பதில் சிரமம் ஏற்படலாம். உங்கள் உடைமைகள் மீது கவனம் தேவை. குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு புதிய வேலை கிடைக்கலாம். இதனால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். எந்த அதிர்ஷ்டத்தை நம்பி எந்த வேலையையும் செய்ய வேண்டாம். இல்லையென்றால் அதை முடிப்பதில் சிக்கல் ஏற்படும். ஏதாவது ஒரு விஷயத்தில் உங்கள் தாயுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். குடும்பத்துடன் பழைய நினைவுகளை அசைபோடுவீர்கள். எங்காவது பயணம் செல்ல திட்டமிட்டமிடுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு வாழ்க்கைத் துணை தேடும் முயற்சி வெற்றி கிடைக்கும். சிலருக்கு காதல் மலர வாய்ப்பு உண்டு. பழைய முதலீட்டில் இருந்து இன்று நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்படும் சண்டையால் உங்களுக்கு தலைவலியாக மாறலாம். புதிய வியாபாரத் திட்டங்களில் பணம் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். மாணவர்கள் தங்கள் மூத்தவர்களின் உதவியை நாட வேண்டியிருக்கும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். காதல் வாழ்க்கையில் இணக்கமான சூழல் இருக்கும். உங்கள் காதலியிடமிருந்து பரிசு கிடைக்கும். உங்கள் துணையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் யாருடனும் கூட்டு சேர வேண்டாம். அது மன கசப்பை ஏற்படுத்தும். பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். இல்லையென்றால் ஏமாற்றப்படலாம். பெற்றோருக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம்.

Share
தொடர்புடையது
tnadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 16 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 16.05. 2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 2, வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 2
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 15 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 15.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசிமாதம் 1, வியாழக் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில்...

tamilnaadi 2
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 மே 2025 – Daily Horoscope

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

tamilnaadi 2
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 13..05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 30, செவ்வாய்க் கிழமை, சந்திரன் விருச்சிகம்...