சீனத் தடுப்பூசி – இலங்கையருக்கு தடைவிதித்தது பிரான்ஸ்
சீனத் தடுப்பூசி – இலங்கையருக்கு தடைவிதித்தது பிரான்ஸ்சீனாவின் தயாரிப்பான சினோஃபோர்ம் தடுப்பூசி பெற்றுக்கொண்ட இலங்கையர்களை தனது நாட்டுக்குள் வர பிரான்ஸ் தடைவிதித்துள்ளது. இத் தகவலை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
மேலும், கடந்த ஜீலை மாதம் 31ஆம் திகதி முதல் சினோஃபோர்ம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் பிரான்ஸ் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஃபைஸர், மடோனா, அஸ்ட்ராஜெனகா மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் இரண்டு வாரங்களுக்குப் பின் நாட்டினுள் அனுமதிக்கப்படுவார்கள். அதேவேளை மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தியவர்கள் 4 வாரங்களுக்குப் பின்னர் நாட்டினுள் பிரவேசிக்கமுடியும் என்று கொழும்பிலுள்ள பிரெஞ்சு தூதரகம் அறிவித்துள்ளது.
Leave a comment