9
உலகம்செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் போர்நிறுத்தம்! ட்ரம்புக்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பு

Share

பல மாதங்களாக நீடித்த கனிம ஒப்பந்த விவகாரம் தொடர்பிலான, சில மணி நேர பரபரப்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருப்பதாக உக்ரைனும் அமெரிக்காவும் உறுதியளித்துள்ளன.

இது ரஷ்யா – உக்ரைன் முறுகலை தனிக்க ட்ரம்புக்கு கிடைத்துள்ள வாய்ப்பு என்றும ்கூறப்படுகிறது.

அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“எங்கள் தரப்பு கையெழுத்திடத் தயாராக உள்ளது. உக்ரைனியர்கள் கனிம ஒப்பந்த மாற்றத்திற்கு தயாராக உள்ளனர்” என ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார்.

மேலும் உக்ரைனியர்கள் அதை மறுபரிசீலனை செய்வார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் எனவும் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக உக்ரைனிய அதிகாரி ஒருவர் வாஷிங்டனுக்குச் சென்றதாகவும் ஆனால், அமெரிக்கா உக்ரைனை இரண்டு கூடுதல் ஆவணங்களில் கையெழுத்திட வற்புறுத்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

இதன் காரணமாகவே இந்த ஒப்பந்தம் முன்கூட்டியே நிறைவேறப்படாத நிலை காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்கா அணுக அனுமதிக்கும் இந்த ஒப்பந்தம், ரஷ்யாவுடனான போரில் அமைதி தீர்வைப் பெற ட்ரம்புக்கு சிறந்த வாய்ப்பாகும் என கூறப்படுகிறது.

மேலும் உக்ரைன் தரப்பானது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வெள்ளை மாளிகையுடனான உறவுகளை சரிசெய்ய ஒரு வாய்ப்பாக மாறும் என நம்பப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...