6 1
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் மாற்றம்..!

Share

இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 293 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 361 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 341 ரூபாவாகும்.

அதேவேளை, 286 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 274 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 331 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.

அத்துடன், மண்ணெண்ணெய் 05 ரூபாவினால் குறைக்கப்பட்டு 178 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...