10
இலங்கைசெய்திகள்

பிள்ளையான் கைதானமை கொடுமையான விடயமாகும்! கவலையில் கருணா

Share

பிள்ளையான் தற்போது சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும் எனவும், ஏற்கனவே இல்லாத பிரச்சினையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தவர் எனவும் முன்னாள் பிரதியமைச்சரும், தமிர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், கருத்து வெளியிட்ட அவர்,

“மட்டக்களப்பில் ஒரு நபர் வயல் செய்வதற்காக பல மக்கள் பாவிக்கின்ற குளத்தை உடைக்கின்றார்கள்.

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் ஒருவரும் சென்று அதனை பார்வையிடவில்லை.

இவ்வாறானவர்கள் நமக்கு எதற்கு. தேர்தல் காலத்தில் மேச்சேல்தரைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்போம் என தெரிவிப்பார்கள் தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்தப் பக்கமே அவர்கள் போகவில்லை.

மக்கள் இவ்விடயத்தில் விழிப்பாக இருந்து செயல்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தில் ஓர் விதி போன்று ஒன்று உள்ளது அரசாங்கம் மாறி மாறி வருகின்ற போது முன்னை அரசாங்கத்தில் இருப்பவர்களை பிடித்து கைது செய்வது விதி போன்ற உள்ளது’’ என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...

ஜெயலத் பண்டார திஸாநாயக்க
இலங்கை

ஜெயலத் பண்டார திஸாநாயக்கவுக்கு பயணத்தடை.

நிதி மோசடி ஒன்றின் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார...