14 3
உலகம்செய்திகள்

இந்தியா பொய் சொல்கிறதா? ரஷ்யா, சீனா விசாரிக்க வேண்டும்! பாகிஸ்தான் அறைகூவல்

Share

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து ரஷ்யா, சீனா விசாரணை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதற்கு தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் கூறியது. எனினும் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் ரஷ்யாவும், சீனாவும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ரஷ்ய ஊடகமான RIA Novosti செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில்,

“இந்த நெருக்கடியில் ரஷ்யா அல்லது சீனா அல்லது மேற்கத்திய நாடுகள் கூட மிகவும் நேர்மையான பங்கை வகிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர்கள் ஒரு புலனாய்வுக் குழுவை அமைக்கலாம்.

இந்தியா அல்லது மோடி பொய் சொல்கிறாரா என்பதை விசாரிக்கும் இந்த பணியை அவர்களுக்கு அளிக்க வேண்டும். ஒரு சர்வதேச குழு கண்டுபிடிக்கட்டும்” என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...