9 34
இலங்கைசெய்திகள்

திடீரென அதிகரிக்கப்பட்ட உணவுகளின் விலைகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

திடீரென அதிகரிக்கப்பட்ட உணவுகளின் விலைகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திடீரென உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது என நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த விலை அதிகரிப்பானது நேற்று (18) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்திற்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, பிரைட் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாவினாலும், தேநீரின் விலை 05 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரி மேலும் கூறுகையில், உணவு வகைகளின் விலையை திடீரென அதிகரிக்குமாறு கோருகின்ற சங்கங்களின் சட்டத்தன்மை தொடர்பில் ஆராயப்படும் என எச்சரித்துள்ளார்.

அத்துடன் தற்போது பொருட்களின் விலை குறைவடைந்துள்ளது. திடீரென உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...

Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...