இந்தியாஉலகம்செய்திகள்

இந்தியாவிற்கு போலி பாஸ்போர்ட்டில் வந்தால் ரூ.10 லட்சம் அபராதம்

Share
11 18
Share

இந்தியாவிற்கு போலி பாஸ்போர்ட்டில் வந்தால் ரூ.10 லட்சம் அபராதம்

இந்தியாவில் கடுமையான விதிமுறைகளுடன் புதிய குடியேற்ற மசோதா நடைமுறைக்கு வரவுள்ளது.

மோடி அரசு கொண்டு வர உள்ள Immigration and Foreigners Bill 2025 மசோதாவில், இந்தியாவிற்குள் அனுமதியின்றி நுழையும் வெளிநாட்டினருக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், வெளிநாட்டினர் போலி பாஸ்போர்ட் பயன்படுத்தினால் ரூ.10 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த மசோதா, தற்போதைய Passport (Entry into India) Act, 1920, Registration of Foreigners Act, 1939, Foreigners Act, 1946, மற்றும் Immigration (Carriers’ Liability) Act, 2000 ஆகிய சட்டங்களை மாற்றி, புதிய மற்றும் விரிவான சட்டத்தை உருவாக்குகிறது.

– இந்தியாவிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைவரும் செல்லுபடியாகும் பயண ஆவணங்களை கொண்டிருக்க வேண்டும்.

– குடிவரவு அதிகாரிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் நிர்ணயிக்கப்படும்.

– வெளிநாட்டினர்கள் இந்தியாவில் தங்கும் முறையை கண்காணிக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

– இந்தியாவில் வெளிநாட்டினர் சேர்க்கும் பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புகள் குறித்துவிவரமாக குறிப்பிடப்படும்.

– இந்தியாவில் வெளிநாட்டினரின் இயக்கங்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் அனுமதிக்கப்படுவர்.

இந்த மசோதா, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...