2 40
இலங்கைசெய்திகள்

இந்து மதத்தை இழிவுபடுத்திய அர்ச்சுனா எம்.பி. – வலுக்கும் கண்டனம்

Share

இந்து மதத்தை இழிவுபடுத்திய அர்ச்சுனா எம்.பி. – வலுக்கும் கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) இந்து மதத்தை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதாக கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தின் உப தலைவர் சிவஸ்ரீ சிவரேகன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் நேற்று மாலை (21) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இந்து சமயத்தையும் இந்து சமயத்தை பின்பற்றுபர்களையும்  இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும் கேவலமான வார்த்தைகளை முகநூலில் பதிவிட்டமை கண்டனத்திற்குரியது.

இவ்வாறான கேலித்தனமான பூச்சாண்டித்தனமான வார்த்தைகளைப் பேசுபவருக்கெதிராக இலங்கைச் சட்டத்தின் படி சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆகவே, அவர் இன்றோடு இதை உணர்ந்து இவ்வாறான வார்த்தைகளைப் பேசுவதை நிறுத்த வேண்டும்.

இதே போன்று இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்தவம் என எந்த மதங்களையும் பற்றி எவரும் இழிவாகப் பேசுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம்.

ஜனாதிபதியோ இந்து கலாசார அமைச்சோ அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிடின் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற இந்து குருமார்கள் சைவ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கான தீர்வு வரும் வரையும் போராடுவோம்.

மேலும் அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நியாயம் வேண்டி தாங்கள் வீதியில் இறங்கி போராடப் போவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...