இந்தியாவில் முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்திய மத்திய நீர்வளக் குழுமத்தால் மாதந்தோறும் எவ்வளவு தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என ஒப்புதலளிக்கப்பட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே நீர் திறக்கப்படுவதாகவும் அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டார்.
அத்துடன் முல்லை பெரியாறு அணை திறப்பு தொடர்பாக வெளியாகிய தகவல்கள் தவறானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#india
Leave a comment