செய்திகள்
தமிழக மீனவர்கள் யாழ். சிறைக்கு மாற்றம்!
காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை யாழ்ப்பணம் சிறைக்கு மாற்ற பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 11ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 23 மீனவர்களையும் அவர்களது இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைதுசெய்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைத்திருந்தனர்.
இதனிடையே நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த பருத்துத்துறை நீதவான் மீனவர்கள் அனைவரது விளக்கமறியலையும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடற்படை முகாமில் உள்ள மீனவர்கள் 23 பேரையும் யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றக் கோரி யாழ். மாவட்ட நீரியல்வளத்துறை அதிகாரிகள் மனு அளித்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி மீனவர்கள் 23 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் ஆஜரான இந்தியத் துணைத் தூதரக அலுவலக சட்டத்தரணி மீனவர்கள் 23 பேரையும் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து தமிழகத்தில் உள்ள மீனவர்களின் உறவினர்களிடம் தொலைபேசி வாயிலாக பேச ஏற்பாடு செய்ய வேண்டும், மீனவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தூதர அதிகாரிகள் வழங்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கைவிடுத்தார்.
அதற்கு பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி வரும் 1ஆம் திகதி மீனவர்களை இந்திய துணை தூதரகம் சார்பில் யார் நேரில் சந்திக்கிறார்கள் என்ற விவரத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி உத்தரவிட்டார்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: யாழ். சிறைக்கு மாற்றபட்டனர் இந்திய மீனவர்கள் - தமிழ்நாடி.com