கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல்போயிருந்த பொலிஸ் அதிகாரியான எஸ். இளங்கோவன், சுமார் 51 நாட்களுக்கு பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு நீர்வழங்கும் சுமார் 40 அடி உயரமான நீர்த்தாங்கியில் இருந்தே அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பூண்டுலோயாவை வசிப்பிடமாகக் கொண்ட இவர், நெஞ்சுவலி காரணமாக செப்டெம்பர் 8ஆம் திகதியன்று வைத்தியசாலையில் கம்பளை அனுமதிக்கப்பட்டார். மறுநாள் முதல் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
நீதிவானின் விசாரணையின் பின்னர் சடலம் மீட்கப்பட்டது. அந்த சடலம், காணாமல் போன பொலிஸ் அதிகாரி எஸ். இளகோவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment