6 89
இலங்கைசெய்திகள்

மகிந்தவிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதி – வெளிப்படுத்தும் சுமந்திரன்

Share

மகிந்தவிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதி – வெளிப்படுத்தும் சுமந்திரன்

மறைந்த மன்மோகன் சிங் இந்தியாவின் (India) பிரதமராக இருந்த காலத்தில் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிகாரப் பகிர்வு முறை ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை மகிந்த ராஜபக்சவிடமிருந்து பெற்றிருந்தார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் (வயது 92) (Manmohan Singh) மறைவுக்கு எமது மனப்பூர்வமான அஞ்சலிகள்.

அவர் இந்தியாவின் பிரதமராக இருந்த காலத்தில் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்திருந்தார்.

2011 இல் அப்போதைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான கூட்டறிக்கையில் “13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதிலிருந்து கட்டியெழுப்பி அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறை ஏற்படுத்தப்படும்” என்ற வாக்குறுதியைப் பெற்றவர்.

அவர் பிரதமராக இல்லாத சமயத்திலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கச் சென்றபோது நாம் அவரை, அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி கூறி உரையாடியிருந்தோம்.

qஇந்தியாவின் பொருளாதார எழுச்சிக்குக் காரணகர்த்தாவாக இருந்த அன்னாரின் மறைவுக்கு மீண்டும் எமது மனப்பூர்வமான அஞ்சலிகள் என்றுள்ளது.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...