மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் திங்கள் முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், உரிய நேர அட்டவணைக்கு அமைய அனைத்து பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேற்படி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொவிட் பரவல் காரணமாக தடைசெய்யப்பட்டிருந்த தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களை வழங்குமாறு போக்குவரத்து அமைச்சுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்துடன், நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் போக்குவரத்து அமைச்சர் பவித்திர வன்னியராச்சி மேற்படி ஆலோசனையை வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment