15 25
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு எதிரான அரசாங்கத்தின் பாரதூரமான செயல்! நாமல் சீற்றம்

Share

மகிந்தவுக்கு எதிரான அரசாங்கத்தின் பாரதூரமான செயல்! நாமல் சீற்றம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை பாரதூரமானது எனவும், அரசாங்கமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பை நீக்குவதற்கான பரிந்துரைகளை வழங்கிய குழுவிற்கு உண்மையில் தேசிய பாதுகாப்பு பற்றிய புரிதல் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தலதா மாளிகைக்கு இன்று (24.12.2024) விஜயம் செய்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளின் அடிப்படையில் அந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால், புலனாய்வு அமைப்புகளின் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கள் உட்பட தற்போதைய அரசாங்கமே விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

அத்தோடு, ராஜபக்சர்கள் எப்போதும் இந்நாட்டின் இயல்புக்கு ஏற்ப தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தரப்பினர்’’ என்றார்.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...